நாடு முழுவதும் 100 நவீன நகங்களுக்கு (ஸ்மார்ட் சிட்டி) ரூ.7,060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
"நடப்பு நிதி ஆண்டில் நவீன நகரங்களுக்கு ரூ 7060 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர அளவில் உள்ள நகரங்களை நவினபடுத்துதல், பெரும்பாலான நகரங்களை செயற்கைகோள் நகரங்களாக மேம்படுத்துவதின் மூலம் 100 நவீன நகரங்களை உருவாக்கபடும்.
வளர்ச்சியும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஊரக பகுதியிலிருந்து நகரங்களை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தாக்குப் பிடிக்க புதிய நகரங்களை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே இருக்கும் நகரங்கள் வாழமுடியாத நகரங்களாக மாற வாய்ப்பு உள்ளது" என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.