இந்தியா

நீரில் தவறிவிழும் குழந்தையை காப்பாற்றும் நவீன டி ஷர்ட் - ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

செய்திப்பிரிவு

மும்பை: குழந்தைகள் நீரில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிற நிலையில், அதை தடுக்கும் வகையில், டி ஷர்ட் ஒன்றை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த டி ஷர்ட் அணிந்து நீரில் விழும்போது, அது தானாக லைப் ஜாக்கெட்டாக மாறி மிதக்கும். இதனால், குழந்தை நீரில் மூழ்காது.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, “இந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போகலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நோபல் பரிசை விட இது உயர்வானது. இரண்டு பேரக் குழந்தைகள் எனக்கு உள்ளனர். அவர்களின் நலமும் பாதுகாப்புமே எனது முன்னுரிமை. அதனால், இந்தக் கண்டுபிடிப்பு எனக்கு மிக முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவை இதுவரையில் 9 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT