முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராஜீவ் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
இந்தியா

ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவருடைய 32-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே ராகுல் காந்தி, “என்னுடைய தந்தையின் 32-வது நினைவு நாளில், அவருக்கு நெஞ்சார்ந்த மரியாதை செலுத்துகிறேன். அப்பா, நீங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்கள், என்னுடைய நினைவுகளில் என்றென்றும் வசிக்கிறார்கள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT