உத்தரப் பிரதேசத்தில் சக்கரை ஆலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரீல் வெளிப்பட்ட வாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவர்கள் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) வெளியிட்ட செய்தியில்,”உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாம்லி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்கரை ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
அந்த கழிவு நீரிலிருந்து வெளிப்பட்ட வாயுவால் அந்த ஆலையின் அருகிலிருந்த சரஸ்வதி வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியின் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 100 பேருக்கு தலைவலி மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
சம்பந்தப்பட்ட சக்கரை ஆலையின் முன் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சக்கரை ஆலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.