பிரியங்க் கார்கே | கோப்புப் படம் 
இந்தியா

Karnataka Election Results | மல்லிகார்ஜூன கார்கே மகன் சித்தாபூர் தொகுதியில் வெற்றி

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மதியம் 2 மணி நிலவரம்: மதியம் 2 மணி நிலவரப்படி, காங்கிஸ் கட்சி 126 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்தம் 136 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை அக்கட்சி பெற்றுள்ளது. பாஜக 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒரு தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மற்றவை 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் வெற்றி: சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனது தொகுதி மக்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் நாங்கள் நிலையான ஆட்சியைக் கொடுப்போம். முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT