இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கு 2,500 மொபைல் கழிப்பறைகள்

செய்திப்பிரிவு

ஜம்மு: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. ஆக. 31 வரை 62 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஜம்முவில் நேற்று அதிகாரிகள் கூறுகையில், ‘‘அமர்நாத் யாத்ரீகர்களுக்காக ஜம்மு காஷ்மீரில் 2,500 மொபைல் கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும். கதுவா மாவட்டத்தில் உள்ள லக்கன்பூரில் இருந்து ஆலயம் வரையிலான இந்த கழிப்பறைகளை மொத்தம் 1,500 பணியாளர்கள் நிர்வகிப்பார்கள். பல்தல் வழித்தடத்தில் 940-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளும், பகல்காம் வழித்தடத்தில் 1,345 கழிப்பறைகளும் அமைக்கப்படும்.

ஜம்மு நகரின் யாத்ரி நிவாஸ் மற்றும் பிற இடங்களில் கூடுத லாக 120 கழிப்பறைகள் அமைக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT