பிஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதி களுடன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மோதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) கமாண்டர் ஹரிகாந்த் ஜா உயிரிழந்தார்.
இது தொடர்பாக மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஹாரில் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டிய ஜமூயி மாவட் டம், லக்காரியா வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப் பதாக கிடைத்த தகவலின் பேரில், அவர்களை தேடும் பணியில், மத்திய ரிசர்வ் போலீஸார், கமாண்டர் ஹரிகாந்த் ஜா தலைமையில் ஈடு பட்டிருந்தனர்.