இந்தியா

ஹைதராபாத்தில் விடிய விடிய கனமழை - குழந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை தொடங்கியது.

இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகரவாசிகள், குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

மாநகராட்சி ஊழியர்கள் இரவு முழுவதும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் மழை காரணமாக ரஹ்மத் நகரில் ஒரு வீட்டின்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 மாத குழந்தைஉயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT