சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக பாலிவுட் நடிகரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிதுன் சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், திரிபுரா மாநிலங்களில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் ரூ.10,000 கோடி வரை மோசடி செய்திருப்ப தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் தங்கள் சேமிப்பு பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பாக 47 வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிதுன் சக்ரவர்த்தி செயல்பட்டார். இதற்காக அவ ருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்தும் சிட்பண்ட் மோசடி குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, மோசடிக்கும் மிதுன் சக்ரவர்த்திக்கும் தொடர் பில்லை என்றாலும் அந்த நிறு வனம் செயல்பட்டவிதம், நிதி வசூல் ஆகியவை குறித்து அவரிடம் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம் என்று தெரிவித்தன.
இதுதொடர்பாக மிதுன் சக்ர வர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் நிருபர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்.