கோப்புப்படம் 
இந்தியா

அம்பேத்கர் பிறந்தநாள் | டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு அருகே நடைபெற்ற விழாவில் அவரது முழு உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட புத்த மத குருமார்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT