இந்தியா

ஆப்கனில் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நூலிழையில் தப்பியது இந்திய விமானம்: காபூலில் இருந்து டெல்லிக்கு வந்தபோது சம்பவம்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டெல்லிக்கு புறப் பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தை குறிவைத்து தீவிரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவச மாக விமானம் தப்பியது.

விமானத்தின் பயணிகள், பணி யாளர்கள் என சுமார் 100 பேர் இருந்தனர். தாக்குதலில் தப்பிய விமானம் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக டெல்லி வந்தடைந்தது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்த மான போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது. அப்போது திடீரென ராக்கெட் குண்டு ஒன்று விமானத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு விமானத்தின் மீது பாயவில்லை.

இதையடுத்து விமான நிலை யத்தில் பணியில் இருந்த பாது காப்புப் படையினர், ராக்கெட் குண்டு வந்த இடத்தை நோக்கி எதிர்த் தாக்குதல் நடத்தினர்.

தலிபான் தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப் படுகிறது.

காபூலில் இருந்து டெல்லிக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படு கின்றன. இத்தாக்குதல் சம்பவத் தால் விமான சேவைகளை நிறுத்தும் யோசனை ஏதுவும் இல்லை என்று ஸ்பைஸ் ஜெட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக விமானத்தை இயக்குவது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் விரைவில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் என்று தெரிகிறது.

சமீபகாலமாக விமான நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கராச்சி, பெஷாவர் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது ஆப்கானிஸ்தானிலும் இதேபோன்ற தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

SCROLL FOR NEXT