மோகன் பாகவத் 
இந்தியா

தென் மாநிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளைவிட இந்து குருக்கள் வழங்கும் சேவை அதிகம்: ஆர்எஸ்எஸ்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: தென் மாநிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளைவிட இந்து குருக்களால் வழங்கப்படும் சேவை அதிகம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ''ஆரோக்கியமான சமூகம் உருவாக சேவைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏதாவது ஒரு சமூகம் பின்தங்கி இருந்தால் நாட்டின் நலன் கருதி அந்த சமூகத்தை உயர்த்த வேண்டும்.

பொதுவாக அறிவுஜீவிகள் சேவையைப் பற்றி பேசும்போது, கிறிஸ்தவ மிஷனரிகளின் சேவையைத்தான் அவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளால் வழங்கப்படும் சேவையைவிட, இந்து ஆன்மிக குருக்களால் வழங்கப்படும் சேவை அதிகம்'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT