பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பித்ரி கலைஞர் ஷா ரசீத் அகமது குவாதாரி. 
இந்தியா

பாஜக அரசு எனக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கும் என எதிர்பார்க்கவில்லை - பிரதமருக்கு முஸ்லிம் பித்ரி கலைஞர் நன்றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் 47 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது, குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடகாவைச் சேர்ந்த பித்ரி கைவினை கலைஞர் ஷா ரசீத் அகமது குவாதாரிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார். பித்ரி என்பது தகடில் செய்யப்படும் பாரம்பரிய கைவினைத் தொழில்.

விருது பெற்ற பின் ஷா ரசீத், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஐ.மு கூட்டணி ஆட்சி காலத்தில் நான் 10 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் எனக்கு விருது கிடைக்கவில்லை. பாஜக அரசு, முஸ்லிம்களுக்கு விருது வழங்கி கவுரவிக்காது என நினைத்து, நான் விருதுக்கு விண்ணப்பிப்பதை விட்டுவிட்டேன். நான் நினைத்தது தவறு என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்கள். நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ என்றார். இதைக் கேட்டு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.

SCROLL FOR NEXT