கோப்புப்படம் 
இந்தியா

ஆபத்தான நிலையில் மேலும் 3 கிணறுகள் இந்தூரில் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோயில் கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது ராம நவமியின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது சிலாப் உடைந்து 60 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் 36 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்தூர் கோயில்களில் உள்ள கிணறுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விபத்து நடந்த கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் இருக்கும் 3 கோயில்களில் மூடப்பட்ட நிலையில் ஆபத் தான கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT