உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் நகரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து சிறப்பு கண்காணிப்பாளர் ராஜேஷ் பாண்டே கூறும்போது, "வெடிப்பு விபத்து ஏற்பட்ட வீடு அலிகார் நகரின் பீமாநகர் பகுதியில் உள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் எல்பிஐ சிலிண்டர் வெடித்ததன் காரணாமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஏஎம்யு மருத்துவமனையில் சிகிச்சைச்சாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்
இந்த வெடி விபத்தில் பலியானவர்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.