மாதல் விருப்பாக் ஷப்பா 
இந்தியா

லஞ்ச வழக்கில் சிக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கைது

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதால் விருப்பாக் ஷப்பா. இவர் அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரஷாந்த் சோப் நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்க ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நிறுவனத்தினர் கடந்த 3-ம் தேதி முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்தபோது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம் சிக்கியது. இந்த வழக்கில் மாதல் விருப்பாக் ஷப்பா, அவரது மகன் பிரஷாந்த் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன் இருவரின் ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று துமக்கூருவில் பண்ணை வீட்டில் விருப்பாக் ஷப்பா, பிரஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார், இருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT