இந்தியா

சாவர்க்கர் பற்றி விமர்சனம் - ராகுலுக்கு உத்தவ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நாசிக்: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம்.

அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

SCROLL FOR NEXT