இந்தியா

ஏன் பயப்படுகிறீர்கள்? - ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்ஐசி, எஸ்பிஐ வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் ஓய்வூதிய பணம் கூட அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒய்வூதிய பணத்தை ஏன் அதானிக்கு வழங்க வேண்டும்.

‘மோதானி’ தொடர்பு பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு கூட, இபிஎப்ஓ பணம் அதானிக்கு வழங்கப்படுவது ஏன்? இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை; எந்த பதிலும் இல்லை. ஏன் இந்தளவுக்கு பயம்?’’ என்று கேட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, ‘மோதானி’ என்று குறிப்பிட்டுள்ளார். இது பிரதமர் மோடி - அதானி ஆகியோரின் பெயரை ஒன்றிணைத்து சூசகமாக கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT