பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரேசில் செல்கிறார்.
பிரேசிலில் பிரிக்ஸ் நாடுகளுக்கான மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, கனடா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் கூட்டாக இணைந்து ஏற்படுத்தியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரேசில் செல்லகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம் ஆகியோர் பிரேசில் செல்கின்றனர்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், முதன் முறையாக ஆசிய நாடுகளுக்கான மிகப் பெரிய மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இந்த பேச்சுவார்த்தையால், வளர்ச்சியடைந்த ஆசிய நாடுகளுடனான நட்புறவு வளர வழிவகுக்கும். முக்கியமாக சீன அதிபருடனான பேச்சுவார்த்தை இந்தியா- சீனா ஆகிய நாடுகளுடனான சில பிரச்சனைகளை தீர்க்க ஏதுவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண வரும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலையும் சந்தித்து பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.