இந்தியா

தலித்துகள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தலித் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன.

காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலித் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT