ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு வழங்கப்பட்ட சந்தன மரத்தில் உருவான புத்தர் சிலை. 
இந்தியா

ஜப்பான் பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலை பரிசு

செய்திப்பிரிவு

கர்நாடக கைவினைக் கலைஞர் களால் உருவாக்கப்பட்ட சந்தன மரத்தாலான புத்தர் சிலையை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.

இந்தியா வந்துள்ள பிரதமர் கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடகா வில் தயாரான சந்தன மர நுண் சிற்பத்தை பிரதமர் கிஷிடாவுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

சிலையின் முன்புறத்தில் தியா னத்தில் இருக்கும் புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறத்தில் போதி மரம் செதுக்கப்பட்டுள்ளது. சந்தன மரத்தில் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கர்நாடக கைவினைக் கலைஞர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய சிலை, கர்நாடகாவில் தயாராகும் புகழ்பெற்ற கடம்வூடி ஜாலி பெட்டியில் வைக்கப்பட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT