இந்தியா

இரண்டு நாள் பயணமாக ஜம்மு- காஷ்மீர் சென்றார் நிர்மலா சீதாராமன்

பிடிஐ

இந்திய பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.

காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காஷ்மீர் சென்றார்.

இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்.

ஜம்மு காஷ்மீர் பயணத்தின் முதல் கட்டமாக அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தியை நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகள், லடாக்கில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகள் மற்றும் 5,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான போர்முனையான சியாச்சின் பனிமலைப் பகுதிக்கும் சென்று நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்.

 பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றபின் நிர்மலா சீதாராமன் காஷ்மீருக்கு செல்வது இதுவே முதல்முறை. அவருடன் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT