முழுதும் ஏ/சி வசதி செய்யப்பட்ட முதல் குளுகுளு பேருந்து நிலையம் அடுத்தவாரம் கொல்கத்தாவில் திறக்கப்படவுள்ளது.
தெற்கு டம்டம் நகராட்சியின் கீழ் வரும் லேக் டவுன் பேருந்து நிலையம் முழு குளுகுளு வசதி செய்யப்பட்டு அடுத்த வாரத்தில் திறக்கப்படவுள்ளது.
முழுதும் கண்ணாடியிலான அறையில் அருமையான இருக்கைகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஏ/சி பேருந்து நிலையத்திற்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைச் சரியாகப் பரமாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கொல்கத்தாவில் மேலும் பல பேருந்து நிலையங்களை குளுகுளு வசதி செய்ய இது முன்மாதிரியாக அமைகிறது என்றும் நகராட்சி துணைத் தலைவர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதன் தொடர்ச்சியாக இத்தகைய ஏற்பாடுகளில் அந்த மாநில அரசு தீவிரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.