இந்தியா

மும்பை ரயில் நிலைய நெரிசல் பலி துயரம்: முதல்வர் பட்னாவிஸ் அரசு மீது குற்றச்சாட்டு தொடங்கியது

ஷுமோஜித் பானர்ஜி

மும்பை எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டு பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்ததையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் அரசும் மீது குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமை பாஜக அரசுதான் இந்தத் துயரத்துக்குக் காரணம் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் கவனம் செலுத்துபவர்கள், இருக்கும் நிதியைக் கொண்டு ரயில் நிலையங்களை சரிசெய்ய முயற்சி செய்யவில்லை.

“புல்லட் ரயில் திட்டம் மகாராஷ்டிராவுக்கு எந்த விதப் பயனையும் அளிக்காது. இது பிரதமர் மோடி குஜராத் தேர்தல்களுக்காக கட்டவிழ்த்து விட்ட பிரச்சார எந்திரத்தின் ஒரு பகுதிதான். மாறாக மகாராஷ்டிரா ரயில் நிலையங்களின் நிலவரத்தை ஆராய்ந்து அதற்கு பணத்தைச் செலவிட்டிருந்தால் இந்தத் துயரம் ஏற்பட்டிருக்காது” என்றார்.

மேலும் அவர் சாடிய போது ரயில்வே துறையையே மொத்தமாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் புல்லட் ரயில் திட்டத்தை விமர்சிக்கவும் செய்த முந்தைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் என்றும் அஜித் பவார் குற்றம்சாட்டினார்.

SCROLL FOR NEXT