பிரதமர் மோடி | கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகா | மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்ற மக்கள்!

செய்திப்பிரிவு

மாண்டியா: பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரை மலர் தூவி மக்கள் வரவேற்றுள்ளனர்.

மாண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு - மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி - தார்வாட் இடையிலான சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட பணிகளை அவர் இந்த நிகழ்வில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டே புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

SCROLL FOR NEXT