இந்தியா

பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவர் பலாத்காரம்: ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரில் உயர்நிலைப் பள்ளிச் சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில், 28 வயது ஆசிரியர் ஒருவரை, ராமநகர் போலீஸார் கைது செய்தனர்.

தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸ் ஆன்டனி சுவாமி.

உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் நடப்பது வழக்கம். சில நேரங்களில், மாணவர்கள் இரவில் தூங்கிவிட்டு, அதிகாலை வீடு திரும்புவதும் நடக்கும்.

அதேபோல், வியாழக்கிழமை இரவு தங்கிய சிறுவனை ஆசிரியர் ஆன்டனி சுவாமி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபற்றிய தகவலை, தமது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் விவரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியரின் வீட்டை முற்றுகையிட்ட மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், சுவாமியை கட்டிப் போட்டு அடித்த பிறகு, போலீஸிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறார் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சுவாமி மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, >பெங்களூரில் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்களால் பலாத்காரம் செய்ய‌ப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT