இந்தியா

பெங்களூருவில் வடகிழக்கு மாநில ஓட்டுநர் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்கினார்.

மேலும், “வேறு மாநிலத்தை சேர்ந்த இவர், எப்படி இங்கு வாடகை பைக் ஓட்டலாம்?” என எச்சரித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT