இந்தியா

தீவிரவாத நிதி திரட்டல் - ஹுரியத் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் பகுதியில் உள்ள ஹுரியத் தலைவர்கள் குவாசி யாசிர், ஜாபர் பட், முகமது இக்பால் காஜா ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் மாநில போலீஸாருடன் இணைந்து சோதனை நடத்தினர்.

SCROLL FOR NEXT