இந்தியா

நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு: அரசு வழக்கறிஞராக ஆர்.எஸ்.சீமா நியமனம்

செய்திப்பிரிவு

நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி, வழக்கறிஞர் பெயர்களும் அறிவிக் கப்பட்டுள்ளன.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், முறைகேடாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமம் வழங்கியதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுகள் 200-க் கும் மேற்பட்ட முதற்கட்ட விசார ணைகளை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து முடிவெடுத்து பரிந்துரை அனுப்பும்படி டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் அமைத்து அதற்கான நீதிபதி பெயரையும் முடிவு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான முடிவுக்கு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர். சிறப்பு நீதிபதியாக கூடுதல் குற்றவியல் நீதிபதி பரத் பராசர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நீதிமன்றம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்குகளை தினந் தோறும் விசாரணை என்ற அடிப்படையில் விரைந்து விசாரிக்கும். சிறப்பு நீதிமன்றம் குறித்து மத்திய அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிட்டதும் இந்த நீதிமன்றம் செயல்படத் தொடங்கும்.

நிலக்கரி வழக்கு விசாரணைக் கான அரசு வழக்கறிஞராக ஆஜராகும்படி, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இந்த கோரிக்கையை நிராகரித்ததையடுத்து, ஆர்.எஸ்.சீமா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT