இந்தியா

அமலாக்கத்துறை சோதனையில் ஜார்க்கண்ட் பெண் ஐஏஎஸ் வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிரான சோதனையில் அமலாக்கத்துறை நேற்று ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அம்மாநிலத்தின் 2000-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2 மாதம் இடைக்கால ஜாமீன்: இந்த முறைகேட்டில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிவர்த் தனை தொர்பாக பூஜா சிங்காலை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு கைது செய்தது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் 2 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் பூஜா சிங்காலுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை நேற்றுசோதனை நடத்தியது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் முகம்மது இ. அன்சாரி என்பவருக்கு சொந்தமான இடத்திலிருந்து ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சுரங்கத் துறையில் முறைகேடு: ஜார்க்கண்ட் சுரங்கத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடுகளில் பூஜா சிங்காலுக்கு உள்ள பங்கு குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT