காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆன நிலையில், அவர் நவம்பர் மாதத்தில் டெல்லியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, சமீபத்திய பேட்டிகளில் கட்சியின் தலைவராவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
நீண்டகால பொறுப்பு வகிக்கும் சோனியா
காங்கிரஸ் கட்சியின் 132 வருட வரலாற்றில், 19 வருடங்கள் முழுதாகத் தலைவராக இருந்த முதல் தலைவர் சோனியா காந்தி. இதன்மூலம் நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
இந்நிலையில் சோனியாவின் மகனான ராகுல் தலைவரான பிறகும் அரசியலில் தொடர்ந்து இயங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கிரஸ் பணிக் குழுவின் உறுப்பினராகவும், நாடாளுமன்றக் குழுவின் காங்கிரஸ் தலைவராகவும் சோனியா காந்தி நீடிப்பார்.
புதிய குழு
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு 2019-ல் அவரின் புதிய குழு, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பங்கு வகிக்கும் என்றும் அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.