இந்தியா

பிரம்மோஸ் 3 ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

தரையில் இருந்து தரை இலக்கை துல்லியமாக தாக்கும் தரம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

தரை வழியாகச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் தரம் உயர்த்தப்பட்ட பிரம்மோஸ் -3 ரக ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று சோதனை செய்தது. தானியங்கி இயக்கி (மொபைல் லாஞ்சர்) மூலம் இயக் கப்பட்ட ஏவுகணை துல்லியமாகச் சென்று இலக்கைத் தாக்கியது.

நான்காவது முறையாக நடத் தப்பட்ட பிரம்மோஸ்-3 ஏவுகணை சோதனை தனது துல்லியமான திறனை வெளிப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த சூழ்நிலையையும் சமாளித்து, இலக்கை துல்லியமாக இந்த சூப்பர்சானிக் ஏவுகணை தாக்கி அழிக்க வல்லமை கொண்டது.

SCROLL FOR NEXT