இந்தியா

உற்பத்தி வரிச் சலுகை எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு

செய்திப்பிரிவு

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட்டில் இன்று பிரீமியம் (பிராண்டட்) பெட்ரோலுக்கான உற்பத்தி வரியைக் குறைத்தார். இதனால் அந்தப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.5 குறைகிறது.

பிரீமியம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.7.50-விலிருந்து ரூ.2.35ஆகக் குறைக்கப்பட்டது.

சாதாரண பெட்ரோலை விட இந்தப் பெட்ரோல் விலை எப்போதும் அதிகம் இருந்து வந்தது. இந்த வகைப் பெட்ரோலில் சிறப்புத் திறன் செயல்பாட்டிற்கான உப பொருட்கள் கலந்திருப்பதால் இதற்கு உற்பத்தி வரி எப்போதும் அதிகம்.

சாதாரணப் பெட்ரோலுக்கும், உயர்திறன் பிரீமியம் பெட்ரோலுக்குமான உற்பத்தி வரி வேறுபாட்டினால், பிரீமியம் பெட்ரோல் விலை அதிகமாக அதன் விற்பனைக் கடுமையாக குறைந்தது.

தற்போது பிரீமியம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதால், மீண்டும் இந்த வகைப் பெட்ரோல் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீ.பி.சி.எல். பிராண்டட் பெட்ரோல் அல்லது ஸ்பீட் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.83.03. சாதாரணப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.73.55.

SCROLL FOR NEXT