இந்தியா

இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்: அதிக எடை சுமந்து செல்லும் ராக்கெட் - ஜூன் முதல் வாரத்தில் விண்ணில் பாய்கிறது

செய்திப்பிரிவு

இந்தியாவின் விண்வெளி திட்டத் தில் முதல்முறையாக 4 டன் எடை கொண்ட தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை எளிதாக சுமந்து செல்லும் மிக வலிமையான ராக்கெட்டை அடுத்த மாதம் விண் ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விண்வெளித் துறையில் சர்வ தேச நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை குறைத்துக் கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விண்வெளி துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்கான முக்கிய கட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் நேற்று ஹைதரா பாத்தில் கூறும்போது ‘‘இஸ்ரோ அடுத்ததாக ஜிஎஸ்எல்வி மார்க்-3 என்ற திட்டத்தை செயல்படுத்த வுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் ஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது. திட்ட ஒருங்கிணைப்புப் பணிகள் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளோம்’’ என்றார். இந்த வகை ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும்போது, விண்வெளி திட்டத்துக்கு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு மிகவும் கனமான செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் வகையில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 4 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களையும், இந்த வகை ராக்கெட்டால் எளிதாக சுமந்து செல்ல முடியும். தற்போது விண் ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட்டுகளால் 2 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் களை மட்டுமே சுமந்து செல்ல முடியும்.

அதிக எடை கொண்ட செயற் கைக்கோள்களை விண்வெளியில் 36,000 கி.மீட்டருக்கு அப்பால் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த வலிமையான ராக்கெட்டுகள் தேவை. அந்த ராக்கெட்டுகளை இந்தியா தயாரிக்காததால், இது வரை ஐரோப்பிய ராக்கெட்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி யிருந்தது. மேலும் இதற்கான செலவும் மிக அதிகம். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இந்திய மண்ணில் இருந்தே செயற்கைக்கோள்களை ஏவி, அதை வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT