ஆந்திராவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பும் போது எதிரே வந்த லாரி மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் பழைய குண்டூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் சொந்த ஊருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குண்டூர் மாவட்டம், மேடிகொண்டூரு எனும் இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி, இவர்களின் கார் மீதி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து குண்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.