இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆளும் பாஜக அறிவிக்கும் வரை எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு இல்லை

ஆர்.ஷபிமுன்னா

குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஆளும் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சிகளோ இதுவரை வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இருமுறை நடைபெற்றது.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் சோனியா தனியாக ஆலோசனை செய்தார். பிறகு லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் சிங் யாதவ், மாயாவதி, சரத் யாதவ், சரத்பவார், தேவகவுடா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் 5-க்கும் மேற்பட்ட வேட்பாளர் களைக் கொண்ட பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “ஆளும் கட்சியினர் முன்னிறுத்தும் வேட் பாளரை ஏற்கக் கூடாது என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளிடம் உரு வாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர், தலித் தலைவர், மூத்த அரசியல்வாதி, அரசியல் சார்பற்ற வர், தொழிலதிபர் என எந்த பிரிவில் அவர்கள் வேட்பாளரை நிறுத்தினாலும் அதற்கு ஈடான வேட்பாளர்கள் எங்கள் பட்டியலில் உள்ளனர். எனவே அவர்கள் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25-ல் முடிவடைகிறது. அதற்கு முன்பாக நடைபெற உள்ள புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்த லில் தாங்கள் அறிவிக்கும் வேட்பாளர் 1,15,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பாஜக நம்புகிறது. இதுவரை தங்களுக்கு சுமார் 50 ஆயிரம் வாக்குகள் குறைவதாக பாஜக கருதிவந்தது. அதிமுக, தெலங் கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் இருந்தது இதற்கு காரணமாக இருந்தது. இக்கட்சிகளில் தெலங் கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவளிப்பதாக அறிவித்து விட்டன. திமுக எதிர்க்கட்சி களுடன் சென்றுவிட்டதால், அதிமுகவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துவிடும் என பாஜக நம்புகிறது. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் சேர்ந்து இறுதிப் பட்டியலாக சிலரது பெயர்களைத் தேர்வுசெய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவரின் பெயர் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT