இந்தியா

சிறைத்தண்டனையை எதிர்த்து நீதிபதி கர்ணன் மனு: விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு

பிடிஐ

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக 6 மாதம் சிறைத்தண்டனை விதித்ததை எதிர்த்து நீதிபதி கர்ணன் மேற்கொண்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.

உச்ச நீதிமன்ற பதிவகம் கர்ணனின் இந்த மனுவை “பராமரிக்கத் தகுதியற்றது” என்று நிர்ணையித்தது.

இது குறித்து உச்ச நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் (கர்ணன்) மே 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை ஒருக்காலும் எதிர்க்க முடியாது.

இது குறித்த நடைமுறைகள் வழக்கின் தன்மையைப் பொறுத்து நன்கு பரிசீலிக்கப்பட்டே நீதிபதி கர்ணன் மிகவும் மோசமான நீதிமன்ற அவமதிப்பைச் செய்தார் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்தே அவருக்கான தண்டனை அளிக்கப்பட்டது. எனவே இந்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டவையே. எனவே இந்த மனு பராமரிக்கத்தக்கதல்ல என்று கூறுகிறோம். எனவே இந்த மனுவை பதிவு செய்ய வேண்டியதற்கான காரணங்கள் இல்லை என்றே கருதுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

கர்ணன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT