அணு மின் உற்பத்தியை அதிகரிக்க மேலும் 10 அணு உலைகளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதி அழுத்த கனநீர் அணு உலைகளைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு அணு உலையும் 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும்.
“மொத்தமாக 7,000 மெகாவாட் கூடுதலாக கிடைக்கும். இது சுத்தமான எரிசக்தியை உற்பத்தி செய்ய உதவும்” என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.