இந்தியா

மற்றொரு நிதி மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூரைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி மல்விந்தர் சிங் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு சிறையில் உள்ளார். இவரது சகோதரர் சிவிந்தர் சிங்கின் மனைவி ஆதித்தி சிங்கை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது.

சிறையில் இருக்கும் மல்விந்திர் சிங்குக்கு ஜாமீன் பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறி அவரது மனைவி ஜாப்னாவிடம் ரூ.3.5 கோடி பணத்தை ஏமாற்றிசுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை, அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்துள்ளது. அவரை 9 நாள் காவலில் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT