யூபிஎஸ்சி தேர்வுகளில் புதிய முறை புகுத்தப்பட்டிருப்பதால் அதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர் நிலைக் கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் அலு வலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மனிதவளம் மற்றும் பயிற்சித் துறை செயலர் எஸ்.கே.சர்கார், யூ.பி.எஸ்.சி. அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் கூறிய போது, பாடத் திட்டத்தை மாற்றவோ அல்லது அறிவிக்கப் பட்ட தேர்வு தேதியை ஒத்தி வைக்கவோ முடிவு செய்யப்படும் என்று கூறினார்.