இந்தியா

வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

செய்திப்பிரிவு

வெங்காயம் விலையை கட்டுப் படுத்த, அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறும் பொதுத் துறை நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப் படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, “டெல்லியில் உள்ள முக்கிய மண்டிகளில் வெங்காயம் மொத்த விற்பனை விலை ரூ.30-க்கு மேல் உயரும் அறிகுறிகள் காணப்படுகின்றன. இதனால் சில்லறை விற்பனை அங்காடிகளில் இதன் விலை மேலும் அதிகரிக்கும். டெல்லியில் உள்ள லாசல் காவ்ன், பிம்பல்காவ்ன் ஆகிய 2 முக்கிய மண்டிகளில் வெங்காயத் தின் அன்றாட வரத்து இந்த மாதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பிம்பல்காவ்ன் மண்டியில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. உள்நாட்டு சப்ளையில் மாற்றம் ஏற்படாவிடில், வெங்காயம் பதுக்கி வைக்கப்படவும், அதன் விலை மேலும் உயரவும் வாய்ப்புள்ளது. எனவே இறக்குமதி அவசியமாகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT