இந்தியா

தென்சீன கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்க அரசு பரிசீலனை

பிடிஐ

சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் கூறும்போது, ''ஆசியா மற்றும் ஆப்ரிக்காவுக்கான வட்டார ஒருங்கிணைந்த பல் அபாய எச்சரிக்கை அமைப்புக்கு (ஆர்ஐஎம்இஎஸ்) இந்தியா தலைமை வகிக்கிறது.

எனவே, தென்சீன கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், இந்த திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்தால் வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பயன்பெறும்'' என்றார்.

SCROLL FOR NEXT