குஜராத் துணை முதல்வர் நிதின் படேலின் மகன் குடிபோதையில் வந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற கத்தார் ஏர்வேஸ் மறுத்துவிட்டது. மேலும், போதையில் இருந்த ஜெய்மின் படேல் விமான நிறுவனர் ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
குஜராத் துணை முதல்வர் நிதின் படேல். இவரது மகன் ஜெய்மின் படேல் மனைவி ஜாலக் மற்றும் மகள் வைஷ்வியுடன் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கிரீஸ் செல்லவிருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அகமதாபாத் சர்வதேச விமான் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். போதை காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை உடன் வந்தவர்கள் சர்க்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துவந்தனர். வழக்கமான சோதனைகள் எல்லாம் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக வந்த அவரை விமான நிறுவன ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். போதையில் இருப்பதால் பயணம் செய்ய முடியாது என்றனர். இதனால், ஜெய்மின் படேல் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இருப்பினும், குடிபோதையில் இருப்பவரை விமானத்தில் ஏற்ற முடியாது என திட்டவட்டமாகக் கூறிய விமான நிறுவனம் அவரை ஜெய்மின் படேலை விமானத்தில் ஏற்ற மறுத்து புறப்பட்டுச் சென்றது.