இந்தியா

மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிருக்கு அனுமதி - மத்திய அரசுக்கு எதிராக 9-ம் தேதி போராட்டம்

செய்திப்பிரிவு

பதிண்டா: கடும் எதிர்ப்பையும் மீறி மரபணு மாற்றப்பட்ட (ஜிஎம்) பி.டி. கத்திரிக்காய் பயிரிட கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி ‘தேசிய உணவு பாதுகாப்பு தினமாக’ அனுசரிக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்பான ‘அலையன்ஸ் பார் சஸ்டெய்னபிள் அன்ட் ஹோலிஸ்டிக் அக்ரிகல்சர்’ (ஆஷா) உள்ளிட்ட பல அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஜிஎம் கடுகு பயிருக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஆஷா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜிஎம் கடுகு பயிரிட அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து, தேசிய உணவு பாதுகாப்பு தினமான வரும் 9-ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒத்த கருத்து கொண்ட அமைப்புகள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT