உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பள்ளிகள் சீர்திருத்தம் குறித்த கூட்டம் நேற்று துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமை யில் நடைபெற்றது. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் தனித்திற மையை வளர்க்கும் வகையில் சனிக்கிழமைதோறும் புத்தகப் பையை அவர்கள் எடுத்து வர வேண்டிய அவசியமில்லை. அன்றைய தினம் அவர்களது தனித்திறனை வெளிப்படுத்தி அவர்கள் மகிழ்ச்சி பெறலாம். இந்தத் திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையிலான நம்பிக்கை மற்றும் புரிதலை மேலும் மேம்படுத்துவதுடன், மாணவர் களின் ஆளுமைத் திறனை வளர்க்க உதவும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் தற்போது நடைமுறையில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காக்கி சீருடைக்குப் பதிலாக பழுப்பு நிறத்திலான அரைக்கால் டவுசர், இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான பழுப்பு நிற காலர் கொண்ட சட்டையும், மாணவி களுக்கு அதே நிறத்திலான சட்டை மற்றும், பழுப்பு நிற பாவாடை என சீருடை மாற்றப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்த முள்ள 75 மாவட்டங்களில் 1.68 லட்சம் அரசுப் பள்ளிகளில் 1.78 கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மாக புத்தகம், சீருடை, புத்தகப்பை, காலணிகள் போன்றவை வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித் யநாத் தெரிவித்துள்ளார்.