இந்தியா

தாதா அபு சலீம் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஜூன் 16-ல் தீர்ப்பு

பிடிஐ

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுவெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் யாகூப் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட மொத்தம் 100 பேருக்கு கடந்த 2006-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட தாதாக்கள் அபு சலீம், முஸ்தபா தோசா மற்றும் ஃபெராஸ்கான், தாகீர் மெர்சன்ட், ரியாஷ் சித்திக், அப்துல் குவாயும் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தடா சிறப்பு நீதிமன்றம் வரும் ஜூன் 16-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

SCROLL FOR NEXT