புதுடெல்லி: உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தானே ரொட்டி சமைத்துள்ளார். அதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் பில்கேட்ஸ். தற்போது பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் இந்திய உணவு வகைகள் மீது ஆர்வம் கொண்டவர். அதற்காக ரொட்டியை தானே சமைத்துள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பில்கேட்ஸ் ரொட்டி தயாரிக்கும் வீடியோவைப் பார்த்து பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், ‘‘சூப்பர், இந்தியாவில் தற்போது சிறுதானிய உணவு வகைகள்தான் பிரபலம். உடல்நலத்துக்கும் மிகச் சிறந்த உணவு. நிறைய சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் சமைக்க முயற்சி செய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.