காஷ்மீரில் தீவிரவாதிகளின் எதிர்ப்பை மீறி போலீஸ் பணி ஆட்தேர்வுக்கு சுமார் 3 ஆயிரம் இளைஞர், இளம்பெண்கள் குவிந்தனர்.
காஷ்மீரில் பிரிவினைவாதம் உச்ச நிலையை எட்டியிருப்பதாகவும் தீவிரவாதம் தலைதூக்கி யிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அண்மையில் மறுத்தார். மாநில இளைஞர்களில் வெகு சிலரே கல்வீச்சு சம்பவங் களில் ஈடுபடுகின்றனர், காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் மணிமகுடமாக திகழும் என்று அவர் தெரிவித்தார். அண்மைகாலமாக காஷ்மீர் இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ராணுவம், போலீஸ் பணிகளில் சேரவும் பெருந்திரளாக குவிந்து வருகின்றனர். இது பிரிவினைவாதிகளிடையே கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படை, போலீஸில் இளைஞர்கள் சேரக்கூடாது என்று பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்புப் படையில் சேர விரும்பும் இளைஞர்களிடையே பயத்தை உருவாக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் இளம் அதிகாரி உமர் பயஸை தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்று கொலை செய்தனர். தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியைச் சேர்ந்த அவர், உறவினர் திருமணத்துக்கு சொந்த ஊருக்குச் சென்றபோது தீவிரவாதிகள் அவரை கொலை
செய்திருப்பது போலீஸ் விசா ரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் காஷ்மீர் இளைஞர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது தீவிர வாதிகளின் கணிப்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக ஏராளமான இளைஞர்கள் போலீஸ் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
அனந்தநாக், பண்டிப்போரா வில் போலீஸ் பணிக்கு ஆட்தேர்வு முகாம்கள் நடைபெற்று வரு கின்றன. முதல்நாளான புதன் கிழமை அனந்தநாகில் 1674 பேரும் பண்டிப்போராவில் 1295 பேரும் குவிந்தனர். தொடர்ந்து 3 நாட்கள் ஆட்தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் இன்னும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.