மத்தியபிரதேசத்தில் செகோர் மாவட்டம், இச்சாவர் என்ற இடத்திலிருந்து தார் மாவட்டத்தின் சிர்சி என்ற கிராமத்துக்கு திருமண நிகழ்ச்சிக்காக 11 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில் கார்கோன் மாவட்டம், கன்பதி காட் பகுதியில் இவர்களின் கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.