இந்தியா

உ.பி.யில் சாதி மோதல்-வன்முறையில் பலியான இளைஞர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு - வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் கைது

பிடிஐ

உத்தரபிரதேச மாநிலம் சஹரான் பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞரின் குடும் பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். வன்முறை தொடர்பாக 24 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரான் பூரில் கடந்த 5-ம் தேதி உயர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நடத்திய பேரணியில் ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப் புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

இதில் ஒருவர் பலியானார். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர். இதுதொடர்பாக சஹரான்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், சஹரான்பூரில் நேற்று முன்தினம் புதியதாக வன்முறை வெடித்தது. இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஷ் என்ற இளைஞர் கொல்லப் பட்டார்.

இதற்கிடையே, நேற்று ஜனக்பூரி பகுதியில் ஜந்தா சாலையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த பிரதீப் சவுகான் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து, மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நிலவரத்தைக் கண்காணிக்க உள்துறை செய லாளர் மணி பிரசாத் மிஸ்ரா தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாக போலீஸ் அதிகாரிகள் இருவர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஷப்பிர்பூர் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்றார். அவர் சென்ற பின்னர் ஏற்பட்ட வன்முறையில், ஷர்சவா நகரைச் சேர்ந்த ஆசிஷ் (24) சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுபற்றி மாயாவதி வெளியிட் டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வில் உள்ள சாதிய சக்திகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன. பொது மக்கள் இடையே சமூக நல் லிணக்கம், சகோதரத்துவம் உள் ளிட்டவற்றை சீர்குலைக்க முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT